416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மகேஸ்வரி தியாகராஜா April 8, 1934 - April 10, 2023

Date of Funeral

April 23, 2023

வயது: 89

பிறந்த இடம் : தொல்புரம்
வாழ்ந்த இடம் : கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

 

தொல்புரத்தை பூர்வீகமாகவும், யாழ்ப்பாணம், கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 10-04-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீனிவாசகம், கண்மணி தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற சீனிவாசகம் தியாகராஜா(முன்னாள் பதிவாளர் – யாழ் கச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், நவரத்தினம், சின்னத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராசாத்தி, ஜெயலட்சுமி, ராசசெல்வமணி, நாகலட்சுமி, இரத்தினாம்பிகை, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சீனிவாசகம்(லண்டன்), நளாயினி(அவுஸ்திரேலியா), கமலாசினி(லண்டன்), ராகினி(கனடா) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

சத்தியா(லண்டன்), காலஞ்சென்ற கதிரேசபிள்ளை மற்றும் பிரகலாதன்(பிரபா, அவுஸ்திரேலியா), அமரநாத்(ராசா, லண்டன்), சிவக்குமார்(ராஜவர்மன், கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுலக்‌ஷ்மி ராஜ்குமார்(அவஸ்திரேலியா), தனுராஜ்(நியூசிலாந்து), மயூரன்(லண்டன்), யுகாந்தகி(லண்டன்), லக்‌ஷனா(லண்டன்), விசாகன்(லண்டன்), ஷரிணி(கனடா) ஆகியோரின் அருமைப் பேத்தியும்

தருண், தராணா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

“புகழ் பூத்த யாழ்ப்பாணப் பெருநகரின்,
கொட்டடிப் பகுதிதனில்
கோலோச்சிய சீரிய சீனிவாசகம் பரம்பரையின்
அதிமூத்த தீபம் அணைந்ததுவோ!

வந்தாரை வரவேற்று,
வயிறார அமுது படைத்த
வளைக்கரம் ஓய்ந்ததுவோ
என்றென்றும் அழகொளிரும்
இனிய வதனம்- தன்
புன்னகையை இழந்ததுவோ!
எண்பத்தியொன்பதாவது அகவையில்,
எட்டாத தொலைவு சென்றதுவோ” 

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

ராகினி – மகள்
சிவக்குமார்(ராஜவர்மன்) – மருமகன்
சீனிவாசகம் – மகன்
அமரநாத்(ராசா) – மருமகன்
பிரகலாதன்(பிரபா) – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp